நாயர் மெஸ் (Nair Mess):
கடந்த இரண்டு வாரங்களாக எழுதவில்லையே தவிர கடைக்குப் போய் சாப்பிடாமல் இல்லை. திருப்பூர் போக, போன சனிக்கிழமை மாலை 5:30 மங்களூர் எக்ஸ்பிரஸை தவறவிட்டு, நடப்புப் பயணச் சீட்டில் பதிந்த பொழுது இரவு 8:45 ஆழப்பி எக்ஸ்பிரஸ் தான் கிடைத்தது :(.
மூன்று மணிநேரம் "தேமே" என்று சென்ட்ரல் ஸ்டேஷனில் விஜய் சேதுபதி சொல்லும் அறிவுரையை யார் கேட்பது என்று யோசித்த போது, திருவல்லிக்கேணி "நாயர் மெஸ்" இல் போய் சாப்பிட்டு வந்தால் என்ன என்று தோன்றியது. கிரீன் சிக்னல் கிடைக்க பத்து நிமிடத்தில் மெசில் ஆஜர்.
சேப்பாக்கம் ஸ்டேடியம் போனவர்கள் யாரும் நாயர் மெஸை அறியாமல் இருக்க மாட்டார்கள். பெல்ஸ் ரோட்டில் ஸ்டேடுயத்திற்கு எதிரில் உள்ள பஸ் ஸ்டாண்டை ஒட்டிய சந்தில் நாலாவது கடை. மெஸ் என்றால் "மெஸ்" இல்லை. நல்ல தரமான "உயர் தர" உணவகம் தான்.
நல்ல குருவாயூர் சந்தனம் வைத்த "சேட்டன்" தான் ஆர்டர் எடுத்தார். ஸ்பெஷல் என்னவென்று கேட்க, சிக்கன் சாப்ஸ், சிக்கன் பாயா, பொரிச்ச வாவல் மீன், வஞ்சிரம், ஈரல், மட்டன் சுக்கா, சிக்கன் வறுவல் என அடுக்கினார். இட்லிக்கு மாட்சாக சிக்கன் சாப்சும் சைட் டிஷாக வஞ்சிரமும் சாப்பிட்டோம். வஞ்சிரம் வித்தியாசமாக சிவப்பு நிறத்தில் இல்லாமல் ப்ரௌன் நிறத்தில் மொருவலாக இருந்தது. கேரள தேசத்தின் ஸ்பெஷல் போல.
சாப்பிட்டு முடித்ததும் ஜீரா வாட்டர் தந்தார்கள். கல்லூரி ஞாபகம் வந்தது :)
மொத்தத்தில் அருமையான இரவு உணவு. கடைசியாக வெளியே வந்ததும் தான் சொன்னாள்,
"இங்கே பிரயாணி நன்றாய் இருக்கும்"
"உனக்கு எப்படி தெரியும்?"
"நான் அஞ்சு வருசமா இதே தெருமுனைல இருக்கற ஹாஸ்டல்ல தான இருந்தேன்"
"???!!!"

No comments:
Post a Comment