இன்னைக்கு காலைல 9 மணிக்கு அப்பாட்ட இருந்து போன் வந்துச்சு.
"ஏய் மண்டத்தல...என்னடா பண்ணிட்ருக்க?"
"இப்பதாம்ப என்துருச்சேன்"
"இப்பதான் எந்துருச்சயா? கோயிலுக்குப் போகுல?"
"எதுக்குப்பா?"
"இன்னைக்கு என்ன கெழம?"
"வெள்ளிக் கெழம...அதுக்கு எதுக்கு கோயிலுக்குப் போகணும்? எதுனா விசேசமா?"
"நல்லா யோசிச்சு பாரு"
"இருங்க காலண்டர பாக்கறேன்....ஹ்ம்ம்...அட இன்னைக்கு பவுர்ணமி...அதுக்கா?"
"இல்ல...நல்ல யோசிடே..."
"ஆமா இது மாசி பவுர்ணமி தான...சித்ரா பவுர்ணமி கூட இல்லையே...ஹ்ம்ம். உங்க கலியாண நாளா?"
"இல்ல"
"அட ஆமா...அது மாசி 4 தானே...இன்னக்கு ரெண்டுதானே ஆச்சு...ஹ்ம்ம்..தெரிலப்பா நீங்களே சொல்லுங்க"
"அட அறிவுகெட்ட லூசு பயலே..இன்னைக்கு பிபரவரி 14...காதலர் தினம்..போயி ரெண்டு பேரும் சீரும் சிறப்புமா இன்னைக்கும் போல என்னைக்கும் இருக்கணும்னு சாமி கும்புட்டுட்டு வாங்க!!!"
"யப்போய்...இது என்ன திருவிழாவா...நீரு டிவி பாத்து ரொம்பதான் கெட்டுடீரு"
"சரி சரி காதலர் தின வாழ்த்துக்கள்!!!
"நல்லதாப் போச்சு போங்க!!"
கட்!!

No comments:
Post a Comment