கடந்த இரண்டு நாட்களாக வீரம், ஜில்லா போன்ற காலத்தால் அழியாதப் படங்களை (சாரி நான் சரியாதான் எழுதுகிறேனா !!??) இல்லை இல்லை குப்பைகளை அரங்கில் பார்க்க நேர்ந்ந்தது. (தல தளபதி ரசிகர்கள் மன்னிக்கவும் நான் இங்கே படத்தை மட்டுமே சொல்கிறேன்). ஒரு திரைப்படம் என்பது ரசிகனை தனக்குள்ளே இழுத்துக்கொள்ளவேண்டும் ஒரு புத்தகம் போல (உ.ம் : பீட்சா, சூது கவ்வும்).
வீரத்தில் தூங்கிவிட்டேன். அருத பழசான கதை, திரைக்கதை. நடிகர்கள் மட்டும் வேறு . மனதில் ஒட்டாத ஒரு பாசத்தை இருக்கு இருக்கு என்று சொல்லி நம்மளை சாகடிக்கிறார் டைரக்டர். இந்த மொக்கை வில்லன்களும்
நம்மளை கடுப்படிக்கிறார்கள். அடிப்பதற்கு பதிலாக கடிப்பதற்கு வசனம் கொடுத்திருக்கிறார் டைரக்டர். கடைசி சீனில் அரைமணி நேரம் பேசுகிறான் வில்லன். படத்தில் பிடித்தது அஜித்தின் சால்ட் அண்ட் பெப்பர் மட்டுமே.
ஜில்லாவில் ஒவ்வொரு பாட்டும் வரும் போதும் "என்ன விடுங்கடா" என்று மனசுக்குள் தோணிகொண்டே இருந்தது. ஒரு சீனுக்கும் அடுத்த சீனுக்கும் தொடர்ச்சி அற்று ஒண்ணுமே புரியாமல் விழிக்கும் போது கடைசில வில்லன் வந்து இப்படி கனெக்ட் பண்ணி பாருங்க என்று நமக்கும் விஜயைக்கும் சொல்கிறார். அப்பாடா படம் முடுஞ்சிருச்சின்னு நினைக்கும் போது "இனி தான் ஆரம்பம்" என்று வில்லனும் விஜயும் நமக்கு புரிய வைக்கிறார்கள். அடுத்த அரைமணி நேரத்தில் ரசித்த ஒரே விஷயம் "கம்ப்ளீட் ஆக்டர்" மோகன் லால் நடிப்பு மட்டுமே. கடைசியாக டைரெக்டரின் கார்ட் வேறு வருகிறது. ஹும் இது தேவையா?
ஆனால் வீரத்திற்கு ஜில்லா பரவால்ல/.
நிற்க.
No comments:
Post a Comment