இன்று மதியம் வடபழனி 100 ரோட்டில் உள்ள "பாபிகணேசன்" மன்னிக்கவும், "பார்பிகியூநேஷன்" இல் நண்பர் விவேகானந்தன் தயவால் விருந்து உண்டோம். சிறப்பான மீன், கோழி, இறால், மட்டன் வகையறாக்கள் தீயில் வாட்டி பறிமாறபட்டன. சைவத்தில் குடைமிளகாய், அன்னாச்சி மற்றும் பன்னீர் நன்றாக இருந்தது. தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ், மாங்காய் மிளகாய் சாஸ் மற்றும் தயிர்கடுகு சாஸ் தரப்பட்டது. தவிர மேற்தடவிகளாக எலுமிச்சை சாறு , குறுமிளகு சாறு நன்றாய் இருந்தது.
பப்பேயில், சிக்கன் பிரியாணி, சைவத்தில் தயிர் சாதம் அருமை. மற்றவை ஓகே ரகம். இனிப்பில் குலோப் ஜாமூன் சூப்பர்.
என்ன கொஞ்சம் காஸ்ட்லி. அசைவம் 750 ரூ. சைவம் 650 ரூ (வரி உட்பட)
பப்பேயில், சிக்கன் பிரியாணி, சைவத்தில் தயிர் சாதம் அருமை. மற்றவை ஓகே ரகம். இனிப்பில் குலோப் ஜாமூன் சூப்பர்.
என்ன கொஞ்சம் காஸ்ட்லி. அசைவம் 750 ரூ. சைவம் 650 ரூ (வரி உட்பட)
No comments:
Post a Comment